Bestweb 2018
Bestweb 2018

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மூன்றாவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மூன்றாவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பு

By Bella Dalima

14 Sep, 2017 | 3:28 pm

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொடர்ந்தும் முன்னெடுத்துள்ள சைட்டத்திற்கு (SAITM) எதிரான தொழிற்சங்க நடவடிக்கையால் பெருமளவிலான நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மூன்றாவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் , அநுராதபுரம், குருநாகல், கண்டி இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் இன்று தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை 8 மாவட்டங்களில் தொழிற்சங்க நடடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நேற்று வவுனியா உள்ளிட்ட 6 மாவட்டங்களில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கையானது, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தொழிற்சங்க நடவடிக்கைக்கு இணையான கவனயீர்ப்புப் பேரணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் மாவட்டங்களிலிருந்து ஆரம்பிக்கப்படும் பேரணி எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.