English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
31 Aug, 2017 | 5:05 pm
உலகமெங்கும் 130-க்கும் மேலான இளம் உயிர்களைப் பழிவாங்கி, பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து வரும் ”ப்ளூ வேல்” விளையாட்டில், தலைவராக செயற்பட்டு, சாவுக்கட்டளைகளை வழங்கி வந்த 17 வயது ரஷ்யச் சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்த பிலிப் புடேய்க்கின் என்னும் 22 வயது மனோதத்துவ மாணவர் ஒருவரால் உருவாக்கப்பட்ட ஆன்லைன் விளையாட்டுதான் ”ப்ளூ வேல்.”
உங்களைப் பற்றிய விபரங்களை முதலில் பதிவு செய்து கொண்ட பின் துவங்கும் இந்த விளையாட்டானது 50 Task-களைக் கொண்டதாகும்.
முழுக்க மனோதத்துவத்தினை அடிப்படையாகக் கொண்டு இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. முதலில் சாதாரணமாக தனியாக திகில் திரைப்படம் பார்த்தல், உயரமான இடங்களில் நின்று புகைப்படம் எடுத்து அனுப்புதல், இடுகாட்டிற்கு நள்ளிரவில் தனியாகச் செல்லுதல் என்று துவங்கும் இந்தப் பட்டியலானது, உடலில் இரத்த காயங்களை உண்டாக்கிக்கொள்ளுதல், கத்தியால் திமிங்கிலத்தின் படத்தினை உடலில் வரைதல் என்று வலுவடைந்து இறுதியாக ஐம்பதாவது Task-காக உங்களை தற்கொலை செய்து கொள்ளுமாறு தூண்டுவதில் முடியும்.
உலகமெங்கும் இதுவரை இந்த விளையாட்டினை விளையாடி 130-க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக 6 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்திலும் நேற்று மதுரையைச் சேர்ந்த ஒரு மாணவர் பலியாகியுள்ளார்.
இந்நிலையில், இந்த விபரீத விளையாட்டில் பல்வேறு ”சாவுக் குழுக்களுக்கு” தலைவியாக இருந்து சாவுக் கட்டளைகளை வழங்கி வந்த 17 வயது ரஷ்யச் சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவின் கபரோவிஸ் கிராய் மாகாணத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
”சாவுக்குழுத் தலைவர்” என்று அழைக்கப்பட்ட இந்தச் சிறுமி முதலில் ”ப்ளூ வேல்” விளையாட்டினை விளையாடுபவராகத்தான் இருந்துள்ளார். அதன் இறுதிக்கட்டமான உயிரை மாய்த்தலுக்குப் பதிலாக, அவர் மற்றவர்களுக்கு விளையாட்டின் கட்டளைகளை வழங்கும் தலைவராக மாறியுள்ளார்.
பல்வேறு குழுக்களுக்கு Task எனப்படும் தொடர் கட்டளைகளை வழங்குபவராக அந்த சிறுமி செயற்பட்டு வந்ததாகவும், இதர சில குழுக்களைப் போலன்றி இந்த குழுக்களில் இணைந்த இளைஞர்கள் கொடுக்கப்பட்ட Task-குகளை செய்யவில்லை என்றால் அவரையோ அல்லது அவரைச் சார்ந்தவர்களையோ கொன்று விடுவதாக மிரட்டப்பட்டதாகவும் தெரிகிறது.
கொடுக்கப்படும் ஒவ்வொரு Task-களும் பங்கேற்பாளர்களை மனோதத்துவ ரீதியில் சித்திரவதைக்கு உள்ளாக்கும் அளவுக்கு இருக்குமென்றும், இறுதியில் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதலில் இதனை உருவாக்கிய பிலிப் புடேய்க்கின் தற்பொழுது கைது செய்யப்பட்டு அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்பொழுது வேறு ஒரு தலைமையின் கீழ் தொடர்ந்து செயற்பட்டு வந்துள்ளமை இந்த கொடூர விளையாட்டின் தீவிரத்தன்மையை உணர்த்துகிறது.
10 Dec, 2019 | 09:49 PM
09 Dec, 2019 | 08:40 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS