ரோஹிஞ்சா இஸ்லாமியர் விவகாரத்தில் குருடாகவும் செவிடாகவுமுள்ள உலக நாடுகள்: எர்டோகன் சாடல்

ரோஹிஞ்சா இஸ்லாமியர் விவகாரத்தில் குருடாகவும் செவிடாகவுமுள்ள உலக நாடுகள்: எர்டோகன் சாடல்

ரோஹிஞ்சா இஸ்லாமியர் விவகாரத்தில் குருடாகவும் செவிடாகவுமுள்ள உலக நாடுகள்: எர்டோகன் சாடல்

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2017 | 5:35 pm

மியன்மாரில் சிறுபான்மையினராகவுள்ள ரோஹிஞ்சா இஸ்லாமியர்களுக்கு உதவி செய்ய சர்வதேச சமுதாயம் களமிறங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள துருக்கி அதிபர் எர்டோகன், உலகம் அவர்களுடைய அவல நிலையில் குருடாகவும், செவிடாகவும் இருப்பதாக விமர்சித்துள்ளார்.

பங்களாதேஷ் நோக்கி ரோஹிஞ்சா இஸ்லாமியர் செல்லும் நிலை மிகவும் வலி நிறைந்த நிகழ்வு என அவர் விபரித்துள்ளார்.

ரோஹிஞ்சா இஸ்லாமியர்களின் நிலைமை தொடர்பில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளதாகவும் துருக்கி அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

சாத்தியமான முறையில் இச்சம்பவத்திற்கு வலுவான கண்டனத்தை வௌியிடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் பௌத்தர்களால் ஒரு மில்லியன் ரோஹிஞ்சா இஸ்லாமியர்கள் பங்களாதேஷில் இருந்து சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள்.

பல்வேறு தாக்குதல்களை எதிர்கொண்டு, தலைமுறைகள் கணக்கில் வசித்துவரும் ரோஹிஞ்சாக்களுக்கு அரசு குடியுரிமை வழங்க மறுத்து வருகிறது.
மியன்மாரில் நடக்கும் தாக்குதல் சம்பவங்களை எதிர்கொண்டு வசிக்க முடியாத இஸ்லாமியர்கள் பிறநாடுகளுக்கு அகதித்தஞ்சம் கோரி இடம்பெயர்கிறார்கள்.

1990-இற்கு பின்னர் தொடர்ச்சியாக இச்சம்பவம் நடைபெற்று வருகிறது.

மியன்மார் நாட்டில் இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து, ஜனநாயக ஆட்சி மலர்ந்திருந்தாலும், ரோஹிஞ்சா இஸ்லாமியர் விவகாரத்தில் எந்தவித மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்