ரயில் சில்லில் சிக்குண்டு அரியாலையைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

ரயில் சில்லில் சிக்குண்டு அரியாலையைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2017 | 7:06 pm

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தபால் ரயிலிலிருந்து யாழ். அரியாலை – புங்கங்குளம் ரயில் நிலையத்தில் இறங்க முட்பட்ட போது சில்லில் சிக்குண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 5.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் அரியாலை பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக அடையாளங்காணப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்