மூன்று நாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி நிறுத்தம்; தனியார் துறையினர் முன்னெடுக்கவுள்ளனர்

மூன்று நாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி நிறுத்தம்; தனியார் துறையினர் முன்னெடுக்கவுள்ளனர்

மூன்று நாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி நிறுத்தம்; தனியார் துறையினர் முன்னெடுக்கவுள்ளனர்

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2017 | 3:29 pm

மியன்மார், பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்தியுள்ளது.

பாரியளவான நிதி தேவைப்படுவதால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் குறித்த நாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளை எதிர்காலத்தில் தனியார் துறையினர் முன்னெடுக்கவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு தெரிவித்தது.

அரிசி இறக்குமதியாளர்களால் 50,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் காலத்தில் 100 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக அரிசி இறக்குமதியாளர் சங்கம் உறுதியளித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்