மக்கா சென்றுள்ள இலட்சக்கணக்கான ஹஜ்ஜாஜிகள் அரஃபா மைதானத்தில் ஒன்று கூடல்

மக்கா சென்றுள்ள இலட்சக்கணக்கான ஹஜ்ஜாஜிகள் அரஃபா மைதானத்தில் ஒன்று கூடல்

மக்கா சென்றுள்ள இலட்சக்கணக்கான ஹஜ்ஜாஜிகள் அரஃபா மைதானத்தில் ஒன்று கூடல்

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2017 | 7:45 pm

புனித ஹஜ் கடமைக்காக மக்கா சென்றுள்ள இலட்சக்கணக்கான ஹஜ்ஜாஜிகள் இன்று அரஃபா மைதானத்தில் ஒன்று கூடினர்.

உலகின் நாலாப்பகுதியில் இருந்தும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஹாஜிகள் இம்முறை ஹஜ் கடமையில் கலந்து கொண்டுள்ளனர்.

ஹஜ் கடமையின் முக்கிய அம்சமாகக் கருதப்படும் அரஃபாவுடைய தினம் இன்றாகும்.

இன்று அரஃபா மைதானத்தில் ஒன்றுகூடிய ஹஜ்ஜாஜிகள் விசேட பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

ஹஜ் கடமைக்காக மக்கா சென்று நோய்வாய்ப்பட்ட ஹாஜிகள் சவுதி அரசாங்கத்தினால் ஹெலிகொப்டர்கள் மூலம் அரஃபா மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இன்று இரவு முஸ்தலிஃபாவுக்கு செல்லும் ஹாஜிகள் நாளை மீண்டும் மினாவை சென்றடையவுள்ளனர்.

இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு இலங்கையர் 3400 பேர் மக்கா சென்றுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்