பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸின் சிரேஷ்ட அதிகாரி குற்றமிழைத்துள்ளதாக ஆணைக்குழுவில் தெரிவிப்பு

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸின் சிரேஷ்ட அதிகாரி குற்றமிழைத்துள்ளதாக ஆணைக்குழுவில் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2017 | 3:50 pm

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி நுவன் சல்காது, குற்றவியல் குற்றமொன்றை இழைத்துள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகள் முறிகள் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றம் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு ஆணைக்குழு அறிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

ஒலிப்பதிவு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புகளை கணினி கட்டமைப்பிலிருந்து அழிக்குமாறு நுவன் சல்காது, தனக்கு ஆலோசனை வழங்கியதாக பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று தகவல் தொழில்நுட்ப அதிகாரி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்