நுளம்பினைக் கொன்று படம் போட்டவரின் கணக்கை முடக்கியது ட்விட்டர்

நுளம்பினைக் கொன்று படம் போட்டவரின் கணக்கை முடக்கியது ட்விட்டர்

நுளம்பினைக் கொன்று படம் போட்டவரின் கணக்கை முடக்கியது ட்விட்டர்

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2017 | 4:41 pm

தன்னைக் கடித்த நுளம்பினைக் கொன்று அதன் படத்தினை ட்விட்டரில் பதிவேற்றியவரின் கணக்கினை, ட்விட்டர் முடக்கிய சம்பவம் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த ட்விட்டர் பாவனையாளர் ஒருவர் @nemuismywife என்ற முகவரியில் இயங்கி வந்தார். அவர் கடந்த 20-ஆம் திகதியன்று தனது வீட்டில் ஓய்வாக அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த பொழுது, தன்னைக் கடித்த நுளம்பு ஒன்றினை அடித்துக்கொன்றார்.

பின்னர் அதனைப் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் கணக்கில் பதிவேற்றினார். அந்தப் பதிவில் அவர், ”நான் ஓய்வாக அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, என்னைக் கடிப்பதற்காக எங்கிருந்து வந்தாய்? சாவு! (நீதான் இப்பொழுது செத்து விட்டாயே)” என்று தெரிவித்திருந்தார்.

சிறிது நேரம் கழித்து அவருக்கு டிவிட்டரில் இருந்து தகவல் ஒன்று வந்தது. அதில் அவர் வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்பும் தகவலை பதிவேற்றியதால், அவருடைய கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டு விட்டதாகவும், இனி அதனை மீட்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவர் உடனே @DaydreamMatcha என்ற முகவரியில் வேறொரு ட்விட்டர் கணக்கினை ஆரம்பித்தார். அதில் அவர், ”நான் என்னுடைய முந்தைய கணக்கில் நுளம்பு ஒன்றினைக் கொன்றதாக தகவல் தெரிவித்து பதிவு இட்டவுடன் என் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இது ஒரு வரம்பு மீறலா?” என்று கோபமாகக் கேட்டிருந்தார்.

அவரது இந்த ட்வீட்டுக்கு 27,000 பேர் லைக் இட்டிருந்தார்கள். 31,000 பேர் அதனை ரீட்வீட் செய்திருந்தார்கள்.

பொதுவாக வெறுப்பு மற்றும் வன்முறையைப் பரப்பும் தகவலைப் பகிரும் ட்விட்டர் கணக்குகள் அதன் நிர்வாகத்தால் முடக்கப்படும். இதற்கு ஒரு தானியங்கி வழிமுறை பின்பற்றப்படுகிறது. ஆனால், ட்விட்டரின் இந்த நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் பரவலாக விமர்சிக்கப்படுகிறது.

 

mosquito


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்