தேசிய பொருளாதார சபை எதிர்வரும் 12 ஆம் திகதி கூடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

தேசிய பொருளாதார சபை எதிர்வரும் 12 ஆம் திகதி கூடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2017 | 8:54 pm

தாம் நியமித்த தேசிய பொருளாதார சபை எதிர்வரும் 12 ஆம் திகதி கூடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மட்டக்களப்பு – கரடியனாறு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாயப் பயிற்சி நிலையக் கட்டடத் தொகுதியினை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மாவட்ட அபிவிருத்திகளுக்கான செயற்றிட்டத்தின் மூலமான 83 மில்லியன் ரூபா செலவில், உலக உணவு விவசாய ஸ்தாபனத்தின் மூலம் இந்த சேவைக்கால பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் இந்த பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டதுடன், நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர், ஆளுநர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்