தடுத்து வைக்கப்பட்டிருந்த 76 இந்திய மீனவர்கள் விடுதலை

தடுத்து வைக்கப்பட்டிருந்த 76 இந்திய மீனவர்கள் விடுதலை

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2017 | 8:21 pm

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய, நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந76 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 76 பேரில் 68 பேர் ஊர்காவற்துறை நீதிமன்றத்திலும் 08 பேர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நீதிமன்றங்களூடாக விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 76 பேரும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 மீனவர்களில் 4 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று அதிகாலை மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்