சொகுசு வாகனங்களுக்கான செலுத்தப்படாத வரிப்பணத்தில் 45% தள்ளுபடி

சொகுசு வாகனங்களுக்கான செலுத்தப்படாத வரிப்பணத்தில் 45% தள்ளுபடி

சொகுசு வாகனங்களுக்கான செலுத்தப்படாத வரிப்பணத்தில் 45% தள்ளுபடி

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2017 | 3:41 pm

சொகுசு வாகனங்களுக்கு இதுவரை செலுத்தப்படாத வரிப்பணத்தில் 45 வீதத்தை தள்ளுபடி செய்வதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வாகன உரிமையாளர்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிப்பணத்தில் 50 வீதம் குத்தகையாக செலுத்த வேண்டியுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் ஜகத் சந்திரசிறி குறிப்பிட்டார்.

அந்த வரிப்பணத்தில் 5 வீதத்தை மாத்திரம் அறவிடவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்தது.

இந்த சலுகைகளை நாளை (01) முதல் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சொகுசு வாகனங்களுக்கான வரிப்பணத்தை நீண்ட காலமாக வாகன உரிமையாளர்கள் செலுத்தாதுள்ளதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் சுட்டிக்காட்டியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்