ஓமந்தையில் 14 வயது சிறுவன் மீது பொலிஸார் தாக்குதல்?

ஓமந்தையில் 14 வயது சிறுவன் மீது பொலிஸார் தாக்குதல்?

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2017 | 8:19 pm

வவுனியா – ஓமந்தை, வேப்பங்குளம் பகுதியில் 14 வயது சிறுவன் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர்கள், சிவில் உடையில் சென்று தாக்குதல் நடத்தியதாக சிறுவனின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

அரசமுறிப்புக்குளம் பகுதியில் நேற்று (30) பிற்பகல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாடு திருடுவதாக சிறுவன் மீது குற்றம் சுமத்தி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, வேப்பங்குளம் பகுதிக்கு ஓமந்தை பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர்கள் நேற்று சுற்றிவளைப்பிற்கு சென்றிருந்ததாகவும் அவர்களால் சிறுவன் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

எனினும், சிறுவன் மீது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்குதல் நடத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டிற்கு அமைய, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.

எவ்வாறாயினும், சிறுவனின் மருத்துவ அறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்