உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பம்

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2017 | 8:47 pm

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் மீண்டும் பிற்போடப்படுமா?

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கூறும் வகையில், டிசம்பர் 9 ஆம் திகதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறக்கூடும்.

எவ்வாறாயினும், சில சட்டங்களில் மீண்டும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் இன்று கையொப்பமிட்டார்.

சபாநாயகர் கையொப்பமிட்ட சட்டத்திற்கு அமைய, உறுப்பினர்களை நியமிக்கும் கோர்ப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவையில் பிரேரணையொன்று நேற்று முன்தினம் முன்வைக்கப்பட்டது.

அந்த பிரேரணைக்கு அமைய, மாநகர சபை மற்றும் நகர சபை கட்டளைச்சட்டம், பிரதேச சபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்