இரணைத்தீவு காணிகளை விடுவிப்பதில் கடற்படையினருக்கு ஆட்சேபனை இல்லை: டி.எம்.சுவாமிநாதன்

இரணைத்தீவு காணிகளை விடுவிப்பதில் கடற்படையினருக்கு ஆட்சேபனை இல்லை: டி.எம்.சுவாமிநாதன்

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2017 | 8:16 pm

கிளிநொச்சி – இரணைத்தீவு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் பூநகரி- நாச்சிக்குடா கடற்படை முகாமில் இன்று இடம்பெற்றது.

மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம். சுவாமிநாதன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

மக்களின் வாழ்விடங்களை விடுவிப்பதற்கு கடற்படையினர் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை எனவும், இரணைத்தீவில் வசித்து வந்த 198 குடும்பங்களின் காணியை அளவிடும் நடவடிக்கையை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் இரணைத்தீவிற்கு சென்று நிலைமையை நேரில் பார்வையிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்