செய்தி சேகரிக்கச்சென்ற நியூஸ்பெஸ்ட் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

செய்தி சேகரிக்கச்சென்ற நியூஸ்பெஸ்ட் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

செய்தி சேகரிக்கச்சென்ற நியூஸ்பெஸ்ட் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

எழுத்தாளர் Bella Dalima

30 Aug, 2017 | 10:35 pm

மட்டக்களப்பு – வாகனேரி, முள்ளிவட்டுவான் ஆற்றுப் பகுதியில் சட்டவிரோத முறையில் இடம்பெறும் மணல் அகழ்வு தொடர்பில் செய்தி சேகரிக்கச்சென்ற நியூஸ்பெஸ்ட் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் நியூஸ்பெஸ்ட் செய்தியாளரை இன்று முற்பகல் அச்சுறுத்தியுள்ளனர்.

ஔிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வௌிவரக்கூடாது எனவும் அவர்கள் அச்சுறுத்தியதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

கெமராக்களைப் பறித்து வைத்துக்கொண்டு தம்மையும் அவர்கள் தடுத்து வைத்திருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பின்னர் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தன்னை விடுவித்ததாகவும் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸாரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

அச்சுறுத்தலுக்கு இலக்கான ஒருவரால் முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், அதற்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் கூறினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்