எவர் விலகினாலும் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

எவர் விலகினாலும் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Aug, 2017 | 10:03 pm

அரசாங்கத்தில் இருந்து எவர் விலகினாலும் அரசாங்கத்தை தாம் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இணக்க அரசாங்கத்தை 2020 ஆம் ஆண்டு வரை முன்னெடுக்க முடியாமற்போவதற்கான காரணங்கள் இல்லையெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்தார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெறவுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற இந்த சந்திப்பில் கட்சி மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போதே ஜனாதிபதி இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்