ரோஹித அபேகுணவர்தன வௌிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி

ரோஹித அபேகுணவர்தன வௌிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

29 Aug, 2017 | 8:46 pm

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன வௌிநாடு செல்வதற்கான அனுமதியை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வழங்கியது.

அமைச்சராகக் கடமையாற்றிய இரண்டு வருடங்களும் மூன்று மாதங்களும் அடங்கிய காலப்பகுதியில் சொத்து மற்றும் வருமானம் என்பனவற்றில் அடங்காத 412 இலட்சம் ரூபா சொத்துக்களுக்கு உரிமையாளராக இருந்தமை தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் ரோஹித அபேகுணவர்த்தனவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் அடிப்படையில், ரோஹித அபேகுணவர்தனவின் வெளிநாட்டு கடவுச்சீட்டு நீதிமன்றத்தினால் பொறுப்பேற்கப்பட்டிருந்ததுடன், அதனை இன்று முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி வரை தற்காலிகமாக விடுவிக்குமாறு மேல் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி சம்பத் விஜயரத்ன உத்தரவிட்டார்.

சந்தேகநபருக்கு விதிக்கப்பட்டுள்ள வௌிநாட்டுப் பயணத்திற்கான தடையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 10 திகதி வரை தளர்த்துவதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளருக்கு அறிவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்