மரம் முறிந்து முச்சக்கரவண்டி மீது வீழ்ந்ததில் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய ஆசிரியை பலி

மரம் முறிந்து முச்சக்கரவண்டி மீது வீழ்ந்ததில் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய ஆசிரியை பலி

மரம் முறிந்து முச்சக்கரவண்டி மீது வீழ்ந்ததில் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய ஆசிரியை பலி

எழுத்தாளர் Bella Dalima

29 Aug, 2017 | 7:08 pm

கொட்டகலையில் இருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மீது சென். கிளயார் பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

39 வயதுடைய இவர் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் பணியாற்றி வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

இன்று மதியம் 12 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு இலக்கான முச்சக்கரவண்டி சாரதி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தலவாக்கலை பகுதியில் இன்று பகல் பெய்த கடும் மழையின் போது வீசிய பலத்த காற்றினால் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதனையடுத்து, போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்