போதைப் பொருள் உருண்டைகளை விழுங்கி நாட்டிற்கு வந்த பாகிஸ்தான் பிரஜை கைது

போதைப் பொருள் உருண்டைகளை விழுங்கி நாட்டிற்கு வந்த பாகிஸ்தான் பிரஜை கைது

போதைப் பொருள் உருண்டைகளை விழுங்கி நாட்டிற்கு வந்த பாகிஸ்தான் பிரஜை கைது

எழுத்தாளர் Staff Writer

29 Aug, 2017 | 1:37 pm

போதைப் பொருள் உருண்டைகளை விழுங்கி, நாட்டிற்கு வந்த பாகிஸ்தான் பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளில், 21 போதைப்பொருள் உருண்டைகளை விழுங்கியமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து உருண்டைகள் வௌியே எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், 37 வயதான பாகிஸ்தான் பிரஜை, பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்