பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸின் தொலைபேசி ஒலிப்பதிவு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் பொறுப்பேற்பு

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸின் தொலைபேசி ஒலிப்பதிவு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் பொறுப்பேற்பு

எழுத்தாளர் Bella Dalima

29 Aug, 2017 | 9:11 pm

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தொலைபேசி ஒலிப்பதிவு கட்டமைப்பை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பொறுப்பேற்றுள்ளது.

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம், சான்றுப்பொருளாக ஒலிப்பதிவு கட்டமைப்பை சமர்ப்பித்துள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் முறிகள் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஒலிப்பதிவு கட்டமைப்பை திரிபுபடுத்தியதன் காரணமாக பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியான கசுன் பாலிசேனவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களம் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மெட்ரோ பொலிட்டன் கொமினிகேசன் நிறுவனம் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தை கண்காணித்த போது 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி முதல் 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் குறித்த தொலைபேசி கட்டமைப்பில் ஒலிப்பதிவு மாற்றப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்