அதிக தொகைக்கு விலைபோன ரஜினியின் 2.0 படத்தின் வௌியீட்டு உரிமை

அதிக தொகைக்கு விலைபோன ரஜினியின் 2.0 படத்தின் வௌியீட்டு உரிமை

அதிக தொகைக்கு விலைபோன ரஜினியின் 2.0 படத்தின் வௌியீட்டு உரிமை

எழுத்தாளர் Staff Writer

29 Aug, 2017 | 11:21 am

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் `2.0′ படத்தின் விநியோக உரிமை அதிக தொகைக்கு விலைபோயுள்ளதாக கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 2.0, லைக்கா புரடொக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் பொலிவுட்டின் பிரபல நடிகர் அக்ஷய்குமார் வில்லனாகவும், எமிஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.

இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் 400 கோடி ரூபாவில் உருவாகி வரும் `2.0′ படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலத்திற்கான தெலுங்கு விநியோக உரிமையை குளோபல் சினிமா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், 2.0 படத்தின் ரிலீஸ் உரிமையை குளோபல் சினிமா 81 கோடிக்கு கைப்பற்றியிருப்பதாக கூறப்படுகிறது, எந்திரன் படத்தின் தெலுங்கு ரிலீஸ் 27 கோடிக்கு விலை போயிருந்தது.

ஏற்கனவே `2.0′ படத்தின் தொலைக்காட்சி உரிமை 110 கோடிக்கு விலைபோனதாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது, ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி வௌியாகவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்