உள்ளூராட்சி மன்றத் தேர்தல் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்தப்படும் 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்தப்படும் 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்தப்படும் 

எழுத்தாளர் Staff Writer

28 Aug, 2017 | 10:29 am

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஒன்பதாம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கல்கிஸ்சை புனித தோமஸ் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியை பார்வையிட சென்ற போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை வாக்காளர் இடாப்பு திருத்தத்திற்கு தமது பெயரை பதிவு செய்துக் கொள்வதற்கு மக்கள் அக்கரை செலுத்துவதில்லை எனவும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

எனினும், புதிய வாக்காளர் இடாப்பு திருத்தத்தை மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலேயே அதிகளவில் வாக்காளர் இடாப்பு குறித்து மக்கள் சிந்திப்பதில்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அரசியல் நிலை, அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையின்மை போன்ற காரணங்களால் இந்த நிலை உருவாகியிருக்கக்கூடும் எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்