வடகொரியா நடத்திய 3 ஏவுகணை சோதனைகளும் தோல்வியில் முடிந்துள்ளதாக அமெரிக்கா தெரிவிப்பு

வடகொரியா நடத்திய 3 ஏவுகணை சோதனைகளும் தோல்வியில் முடிந்துள்ளதாக அமெரிக்கா தெரிவிப்பு

வடகொரியா நடத்திய 3 ஏவுகணை சோதனைகளும் தோல்வியில் முடிந்துள்ளதாக அமெரிக்கா தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2017 | 3:14 pm

வடகொரிய இராணுவம், நேற்று (25) நடத்திய மூன்று ஏவுகணை சோதனைகளும் தோல்வியில் முடிந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஐ.நா மற்றும் சர்வதேச நாடுகளின் கண்டனங்களை பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வருகிறது. இதனால், அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே போர் சூழல் உருவாகியுள்ளது.

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நேற்று நடத்தியுள்ளது.

வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனைகள் தோல்வியடைந்ததாக அமெரிக்கா கூறியுள்ளது.

வடகொரியாவின் கிட்டயராங் பகுதியில் இருந்து மூன்று ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்ததாக அமெரிக்கா கூறியுள்ளது.

அந்த ஏவுகணைகளில் முதலாவது மற்றும் மூன்றாவது சோதனை செய்யப்பட்ட ஏவுகணைகள், செயலிழந்ததாகவும்,
இரண்டாவது சோதனை செய்யப்பட்ட ஏவுகணை, ஏவப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்து சிதறியதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவுடன் தொடர் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் வடகொரியா இன்று காலை புதிய ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்திருந்தது.

இந்த ஏவுகணை குவாம் தீவை குறிவைத்து ஏவப்பட்டிருக்கலாம் என தென்கொரியா சந்தேகிக்கிறது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்