முறக்கொட்டாஞ் -சேனையில் நிர்மாணிக்கப்பட்ட 78 வீடுகள், பயனாளிகளிடம் கையளிப்பு

முறக்கொட்டாஞ் -சேனையில் நிர்மாணிக்கப்பட்ட 78 வீடுகள், பயனாளிகளிடம் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2017 | 8:10 pm

மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனையில், மீள்குடியேற்ற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட 78 வீடுகள், பயனாளிகளிடம் இன்று கையளிக்கப்பட்டன.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார்.

யுத்த காலத்தின் போது முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணியில் ஒரு பகுதி கடந்த 2010 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டது.

இதேவேளை, இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் காணப்படும் பகுதியில் 48 குடும்பங்களுக்கான காணிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காணிகளையும் விரைவில் விடுவித்துக் கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம் சார்ல்ஸ் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஏறாவூர் ஐந்து, வீரபத்திரர் சுவாமி கோவிலுக்கும் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் இன்று சென்றிருந்தார்.

அத்துடன், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கும் சென்று அமைச்சர் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்