கடமைகளை பொறுப்புடன் நிறைவேற்றுவதனூடாக சவால்களுக்கு முகங்கொடுக்க தயார் – தலதா அத்துகோரள

கடமைகளை பொறுப்புடன் நிறைவேற்றுவதனூடாக சவால்களுக்கு முகங்கொடுக்க தயார் – தலதா அத்துகோரள

கடமைகளை பொறுப்புடன் நிறைவேற்றுவதனூடாக சவால்களுக்கு முகங்கொடுக்க தயார் – தலதா அத்துகோரள

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2017 | 2:38 pm

தமது கடமைகளை பொறுப்புடன் நிறைவேற்றுவதனூடாக சவால்களுக்கு முகங்கொடுக்க தயாராகவுள்ளதாக புதிய நீதி அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சுப் பதவி தொடர்பில் நியூஸ்பெஸ்ட் வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் காணப்படும் சட்டங்களை பின்பற்றி அனைத்து பிரஜைகளும், தமது பொறுப்புக்களை முன்னெடுப்பார்களாயின் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படாது எனவும் நீதி அமைச்சர் கூறியுள்ளார்.

புதிய நீதி அமைச்சராக தலதா அத்துகோரல ஜனாதிபதி முன்னிலையில் நேற்று (25) பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

விஜயதாச ராஜபக்ஸ நீதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரலாற்றில் நீதி அமைச்சராக பெண்ணொருவர் நியமனம் பெற்றுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்