11 இளைஞர்கள் கடத்தல்: விளக்கமறியலிலுள்ள கடற்படையினரின் மறுசீராய்வு பிணை மனுவை விசாரிக்க தீர்மானம்

11 இளைஞர்கள் கடத்தல்: விளக்கமறியலிலுள்ள கடற்படையினரின் மறுசீராய்வு பிணை மனுவை விசாரிக்க தீர்மானம்

11 இளைஞர்கள் கடத்தல்: விளக்கமறியலிலுள்ள கடற்படையினரின் மறுசீராய்வு பிணை மனுவை விசாரிக்க தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

25 Aug, 2017 | 7:39 pm

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படை உறுப்பினர்களின் மறுசீராய்வு பிணை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான மேல்நீதிமன்றத்தில் நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க இந்த தீர்மானத்தை இன்று அறிவித்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி. தசநாயக்க உள்ளிட்ட 6 சந்தேகநபர்களும் தங்களுக்கு பிணை வழங்கக்கோரி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு நிராகரிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை இரத்து செய்து, தங்களுக்கு பிணை வழங்குமாறு கோரி சந்தேகநபர்களால் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த மேன்முறையீட்டு மனு அடுத்த மாதம் 26 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி இன்று அறிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு வௌ்ளை வேனில் கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்