போதைப்பொருள் கடத்தலை ஒரு வருடத்திற்குள் தடுத்து நிறுத்துவதாக புதிய கடற்படைத் தளபதி உறுதி

போதைப்பொருள் கடத்தலை ஒரு வருடத்திற்குள் தடுத்து நிறுத்துவதாக புதிய கடற்படைத் தளபதி உறுதி

எழுத்தாளர் Bella Dalima

25 Aug, 2017 | 9:14 pm

கடல் மார்க்கமாக இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலை ஒரு வருடத்திற்குள் தடுத்து நிறுத்துவதாக புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ட்ரெவிஸ் சின்னையா உறுதியளித்தார்.

இந்தியாவிலிருந்து புதிய கப்பலொன்று இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும், பெரிய கப்பல்கள் சிலவற்றை கண்காணிப்புப் பணிகளுக்கு அமர்த்தவுள்ளதாகவும் கடற்படைத் தளபதி தெரிவித்தார்.

அவர் இன்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்றார்.

இதனையடுத்து, தமது எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்