பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸின் தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகள் காணாமற்போனமை தொடர்பில் கேள்வி

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸின் தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகள் காணாமற்போனமை தொடர்பில் கேள்வி

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸின் தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகள் காணாமற்போனமை தொடர்பில் கேள்வி

எழுத்தாளர் Bella Dalima

25 Aug, 2017 | 10:26 pm

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸின் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய தொலைபேசி உரையாடல்களின் குரல் பதிவுகள் காணாமற்போனமை தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது.

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் தமது முதலாவது திறைசேரி முறிகள் விற்பனையை ஊழியர் சேமலாப நிதியத்திற்கு 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஏலமிட்டு, 2015 ஜூன் 5 ஆம் திகதி மேற்கொண்டிருந்தது.

இந்த விற்பனை நேரடியாக இடம்பெறவில்லை எனவும் தரகர் மூலமே இடம்பெற்றதாகவும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன இன்று ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

ஆவணத்துவத்தை துரிதப்படுத்தும் நடவடிக்கைகளில் தரகர் அவதானம் செலுத்தியதாக கசுன் பாலிசேன ஆணைக்குழுவில் குறிப்பிட்டார்.

இந்த பதில்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் தொடர்பிலான கேள்விகளின் ஊக்குவிப்பை வலுப்படுத்தியது.

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் 2015 ஜூன் மாதம் 05 ஆம் திகதிக்கான உரையாடல் பதிவை இலக்க வரிசையின் பிரகாரம் ஏனைய உரையாடல் பதிவுடன் சமர்ப்பித்திருந்தது.

இந்த விடயம் 4 ஆவது உரையாடல் பதிவில் வௌிப்படுத்தப்படுவதுடன், அந்த உரையாடல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டிருந்த இறுவெட்டிலிருந்து விடுபட்டிருந்தது.

குறித்த ஒப்பந்த உறுதிப்படுத்தல் தொடர்பிலான தொலைபேசி உரையாடல் பதிவினை இனங்காண முடியாமை குறித்து சட்ட மா அதிபர் திணைக்களம் கேள்வி எழுப்பியிருந்தது.

கோரப்பட்ட அனைத்து குரல் பதிவுகளும் வழங்கப்பட்டதாக இதற்கு முன்னர் ஆணைக்குழுவிற்கு கசுன் பாலிசேன தெரிவித்திருந்தார்.

எனினும், தற்போது இந்த விடயம் முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்