பாலியல் துஷ்பிரயோக வழக்கில் ராம் ரஹீம் குற்றவாளி என தீர்ப்பு: கலவரத்தில் 29 பேர் உயிரிழப்பு

பாலியல் துஷ்பிரயோக வழக்கில் ராம் ரஹீம் குற்றவாளி என தீர்ப்பு: கலவரத்தில் 29 பேர் உயிரிழப்பு

பாலியல் துஷ்பிரயோக வழக்கில் ராம் ரஹீம் குற்றவாளி என தீர்ப்பு: கலவரத்தில் 29 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

25 Aug, 2017 | 6:22 pm

இந்தியா:  இளம் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இதனையடுத்து அரியானாவில் ஏற்பட்ட கலவரங்களில் 29 பேர் உயிரிழந்துள்ளதுடன், 200 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங், இரண்டு பெண் சீடர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகார் முறைப்பாடு முன்வைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக அவர் மீது 2002 ஆம் ஆண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

அரியானா பஞ்ச்குலா பகுதியில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சுமார் 14 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் குர்மீத் ராம் ரஹிம் சிங்குக்கு அளிக்கப்படும் தண்டனை தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 28ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட குர்மீத் ராம் ரஹிம் சிங்-கை பாதுகாப்பாக பொலிஸார் வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.

தீர்ப்பு குர்மீத் ராம் ரஹிம் சிங்-குக்கு எதிராக அமைந்துவிட்டதால், அவரது ஆதரவாளர்கள் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்ச்குலா பகுதியில் இடம்பெற்ற கலவரத்தின் போது 29 பேர் உயிரிழந்ததாக NDTV செய்தி வௌியிட்டுள்ளது.

கலவரத்தில் ஈடுபட்டவர்களை நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டு பொலிஸார் கலைத்துள்ளனர்.

கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர பொலிஸார், இராணுவத்தினரின் ஒத்துழைப்பை நாடியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்