திராய்க்கேணி படுகொலையின் 27 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

திராய்க்கேணி படுகொலையின் 27 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

எழுத்தாளர் Bella Dalima

25 Aug, 2017 | 7:55 pm

திராய்க்கேணி படுகொலையின் 27 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று நடைபெற்றது.

படுகொலை சம்பவம் இடம்பெற்ற திராய்க்கேணி முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

உயிர்நீத்த உறவுகளின் உருவப்படத்திற்கு அவர்களின் உறவினர்கள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது, உயிர்நீத்த உறவுகளுக்கு ஆத்ம சாந்தி வேண்டி ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட திராய்க்கேணி பிரதேசத்தில் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி 52 பொதுமக்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் பெண்களும் அடங்குவர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்