சூடானுக்கான ரஷ்ய தூதுவர் நீச்சல் குளத்திலிருந்து சடலமாக மீட்பு

சூடானுக்கான ரஷ்ய தூதுவர் நீச்சல் குளத்திலிருந்து சடலமாக மீட்பு

சூடானுக்கான ரஷ்ய தூதுவர் நீச்சல் குளத்திலிருந்து சடலமாக மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

25 Aug, 2017 | 5:02 pm

ஆபிரிக்க நாடான சூடானுக்கான ரஷ்ய தூதுவர் மிர்கயாஸ் சிரின்ஸ்கி அவரது நீச்சல் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

62 வயதான மிர்கயாஸ் சிரின்ஸ்கி, சூடான் தலைநகர் கார்த்தூமில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (23) வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் அவரது சடலத்தைக் கண்ட பாதுகாப்புப் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மிர்கயாஸ் சிரின்ஸ்கிக்கு உயர் இரத்த அழுத்த நோய் இருந்ததாகத் தெரிகிறது.

எனவே, அவர் நீச்சல் குளத்தில் குளித்த போது மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த 9 மாதங்களில் பதவியில் இருந்த போது உயிரிழந்த நான்காவது ரஷ்ய தூதுவராக மிர்கயாஸ் பதிவாகியுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துருக்கிக்கான ரஷ்ய தூதுவர் கர்லோவ் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் இந்தியாவிற்கான ரஷ்ய தூதுவர் அலெக்ஸாண்டர் கடாகின் உடல்நலக்குறைவால் இறந்தார்.

பெப்ரவரி மாதம் ஐ.நா.வுக்கான ரஷ்ய தூதுவர் விட்டலி சுர்க்கின் அமெரிக்காவில் மாரடைப்பால் இறந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்