கிளிநொச்சியில் இராணுவ உறுப்பினர்கள் மீது தாக்குதல்: 6 பேர் கைது

கிளிநொச்சியில் இராணுவ உறுப்பினர்கள் மீது தாக்குதல்: 6 பேர் கைது

கிளிநொச்சியில் இராணுவ உறுப்பினர்கள் மீது தாக்குதல்: 6 பேர் கைது

எழுத்தாளர் Bella Dalima

25 Aug, 2017 | 3:30 pm

கிளிநொச்சி – ஊற்றுப்புலம் பகுதியில் இரண்டு இளைஞர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

நேற்று (24) இரவு இடம்பெற்ற மோதலில் இரண்டு இளைஞர்கள் தாக்குதலுக்கு உள்ளாகினர்.

தனிப்பட்ட தகராறு வலுப்பெற்றதை அடுத்து, இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான இருவரும் இராணுவ உறுப்பினர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்