ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பண்டாரகம பிரதேச சபை முன்னாள் தலைவர் ஜனாதிபதிக்கு ஆதரவு

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பண்டாரகம பிரதேச சபை முன்னாள் தலைவர் ஜனாதிபதிக்கு ஆதரவு

எழுத்தாளர் Bella Dalima

25 Aug, 2017 | 8:14 pm

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய பண்டாரகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சஞ்சய ஹெட்டிகே இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளார்.

பண்டாரகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சஞ்சய ஹெட்டிகே ஜனாதிபதியை அவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று சந்தித்தார்.

நாட்டிற்குத் தேவையான அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் நிலையான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்காக தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சஞ்சய ஹெட்டிகே ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் தேனுக விதானகம மற்றும் ஊவா மாகாண அமைச்சர் அநுர விதான கமகே ஆகியோர் ஜனாதிபதிக்கு தமது ஆதரவினைத் தெரிவித்தனர்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்திய வட மத்திய மாகாணத்தின் பிரதி தவிசாளர் ஜயந்த மாரசிங்கவும் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்திருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்