ஐரோப்பிய கால்பந்து சங்கத்தின் சிறந்த வீரர் விருதை 3 ஆவது முறையாக சுவீகரித்தார் ரொனால்டோ

ஐரோப்பிய கால்பந்து சங்கத்தின் சிறந்த வீரர் விருதை 3 ஆவது முறையாக சுவீகரித்தார் ரொனால்டோ

ஐரோப்பிய கால்பந்து சங்கத்தின் சிறந்த வீரர் விருதை 3 ஆவது முறையாக சுவீகரித்தார் ரொனால்டோ

எழுத்தாளர் Bella Dalima

25 Aug, 2017 | 5:37 pm

ஐரோப்பிய கால்பந்து சங்கத்தின் சார்பில் வழங்கப்படும் சிறந்த வீரர் விருதை 3 ஆவது முறையாக கிறிஸ்டியானோ ரொனால்டோ தட்டிச்சென்றுள்ளார்.

ஐரோப்பிய கால்பந்து சங்கம் சார்பில் ஆண்டுதோறும் கிளப் அணிகளில் விளையாடுவதில் யார் சிறந்த வீரர் என்பதை தேர்வு செய்து அவருக்கு சிறந்த வீரர் விருது வழங்கப்படுகிறது.

2016-2017 ஆம் ஆண்டிற்கான விருதிற்கு ரியல் மட்ரிட் அணியில் விளையாடும் ரொனால்டோ (போர்ச்சுக்கல்), பார்சிலோனாவின் மெஸி (அர்ஜென்டினா), யுவான்டஸ் அணியின் கோல்கீப்பர் பஃப்போன் இடையே கடும் போட்டி நிலவியது.

நேற்று (24) இரவு சிறந்த வீரருக்கான விருது அறிவிக்கப்பட்டது.

இதில் ரொனால்டோ சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டார்.

ரொனால்டா 3 ஆவது முறையாக இந்த விருதை வென்றுள்ளார்.

ஏற்கனவே அவர் 2013, 2015 ஆண்டுகளுக்கான விருதுகளை வென்றிருந்தார்.

சிறந்த வீராங்கனைக்கான விருது நெதர்லாந்தின் மார் டென்சுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த நடுகள வீரர் என்ற விருதை லூகா மோட்ரிக்கும், சிறந்த பின்கள வீரருக்கான விருதை ரியல் மட்ரிட் கேப்டன் செர்ஜியோ ரமோஸும், சிறந்த கோல் கீப்பருக்கான விருதை பஃப்போனும் பெற்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்