இம்சை அரசன் 24 ஆம் புலிகேசிக்காக எடையைக் குறைத்த வடிவேலு

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசிக்காக எடையைக் குறைத்த வடிவேலு

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசிக்காக எடையைக் குறைத்த வடிவேலு

எழுத்தாளர் Bella Dalima

24 Aug, 2017 | 4:29 pm

நீண்ட இடைவேளைக்குப் பிறகு படங்களில் நடித்து வரும் வடிவேலு தற்போது விஜய் நடிப்பில் ‘மெர்சல்’ படத்தில் நடித்து வருகிறார்.

மெர்சல் தீபாவளிக்கு வௌியாக இருக்கிறது.

வடிவேலு அடுத்ததாக `இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (23) தொடங்கியுள்ள நிலையில், இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக பார்வதி ஓமனக்குட்டன் நடிக்கிறார்.

சிம்பு தேவன் இயக்கவிருக்கும் இப்படத்தை ஷங்கரின் எஸ்.பிக்சர்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

இந்த படத்தில் நடிப்பதற்காக வடிவேலு கடந்த 3 மாதகாலமாக கடுமையாக உணவு கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து, உடல் எடையைக் குறைத்திருக்கிறார்.
நேற்று இந்த படத்தின் பூஜையில் கலந்து கொண்ட வடிவேலுவின் புகைப்படம் வெளியாகி இணையத்தளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

 

Imsai-Arasan-24-Aam-Pulikesi-Official-First-Look-Poster-3-410x640


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்