ஹாங்காங்கை கடுமையாகத் தாக்கியது ஹட்டோ புயல்

ஹாங்காங்கை கடுமையாகத் தாக்கியது ஹட்டோ புயல்

ஹாங்காங்கை கடுமையாகத் தாக்கியது ஹட்டோ புயல்

எழுத்தாளர் Bella Dalima

23 Aug, 2017 | 5:42 pm

ஹாங்காங்கை ஹட்டோ எனும் கடும் புயல் தாக்கியுள்ளது.

ஹாங்காங்கின் மையப்பகுதியில் மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் கடுங்காற்று வீசியுள்ளது.

புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துக்களில் மக்காவோ பகுதியில் மூவர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனால், வீடுகளின் கூரைகள் அடித்து வீசப்பட்டு, தெருக்களில் மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அங்கு மழையும் பெய்து வருவதால் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது.

பெரும்பாலான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், வர்த்தக நடவடிக்கைகள் முற்றாகத் தடைப்பட்டுள்ளன.

புயலின் தாக்கத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

சீனாவின் ஹாங்காங் மாகாணத்தை கடந்த ஆண்டும் புயல் கடுமையாகத் தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்