நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்: சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்: சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

22 Aug, 2017 | 6:20 pm

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் யாழ். பதில் நீதவான் காயத்ரி சைலவன் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது சந்தேகநபரை அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழ். நல்லூர் பின் வீதி நாற்சந்தியில் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வாகனத்தில் சென்றபோது கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலராக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்ததுடன் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்