மாணவர்களின் செயற்பாடுகளைக் கண்டித்து கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மாணவர்களின் செயற்பாடுகளைக் கண்டித்து கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மாணவர்களின் செயற்பாடுகளைக் கண்டித்து கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

22 Aug, 2017 | 3:24 pm

கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தின் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கைகளுக்கும் நியாயமற்ற நடவடிக்கைகளுக்கும் எதிராக கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், ஊழியர் சங்கம், கிழக்கு பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர் சங்கம் என்பன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தன.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்றுடன் 81 நாட்களாக ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு மாணவர்கள் பெரும் சிரமத்தைக் கொடுப்பதாகத் தெரிவித்தும் மாணவர்களின் செயற்பாடுகளைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத் தொகுதியில் இருந்து பேரணியாக சென்றவர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சிறிது நேரம் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.

பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்