புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டிரேவிஸ் சின்னையா கடமைகளைப் பொறுப்பேற்றார்

புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டிரேவிஸ் சின்னையா கடமைகளைப் பொறுப்பேற்றார்

புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டிரேவிஸ் சின்னையா கடமைகளைப் பொறுப்பேற்றார்

எழுத்தாளர் Bella Dalima

22 Aug, 2017 | 8:08 pm

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படைகளின் உயர் அதிகாரிகள் இருவர் இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றனர்.

புதிய பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று காலை கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கடமைகளைப் பொறுப்பேற்றதை அடுத்து, அவர் ஜனாதிபதியை சந்தித்தார்.

இதேவேளை, 21ஆவது கடற்படைத்தளபதியாக வைஸ் அட்மிரல் டிரேவிஸ் சின்னையா, இன்று காலை கடமைகளைப் பொறுப்பேற்றார்.

வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, புதிய கடற்படைத் தளபதியிடம் கடமைகளை ஒப்படைக்கும் உத்தியோகபூர்வ வைபவம் கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது

வைஸ் அட்மிரல் டிரேவிஸ் சின்னையா கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஜனாதிபதியை சந்தித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்