சிவகார்த்திகேயன் ரசிகர்களையும் மகிழ்விக்க வரும் `விவேகம்’

சிவகார்த்திகேயன் ரசிகர்களையும் மகிழ்விக்க வரும் `விவேகம்’

சிவகார்த்திகேயன் ரசிகர்களையும் மகிழ்விக்க வரும் `விவேகம்’

எழுத்தாளர் Bella Dalima

22 Aug, 2017 | 4:25 pm

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் – காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் நாளை மறுதினம் (24) வௌியாகவுள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நாளை மறுநாள் படம் வெளியாக இருப்பதால், படத்திற்கான டிக்கெட் விற்பனையும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் விவேகம் வௌியீட்டை அஜித் ரசிகர்கள் பல்வேறு விதமாகக் கொண்டாடி வருகின்றனர்.

விவேகம் படத்திற்கான ரசிகர்கள் காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் `வேலைக்காரன்’ படத்தின் டீசரும் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை `வேலைக்காரன்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

எனவே, எதிர்வரும் 24-ஆம் திகதி அஜித் ரசிகர்களுக்கான விருந்து மட்டுமின்றி, சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கான விருந்தாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்