சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 19 சிறுவர்கள் உட்பட 42 பேர் பலி

சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 19 சிறுவர்கள் உட்பட 42 பேர் பலி

சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 19 சிறுவர்கள் உட்பட 42 பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

22 Aug, 2017 | 4:13 pm

சிரியாவின் ரக்கா பகுதியில் அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 42 பேர் பலியாகினர்.

இது குறித்து சிரிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட செய்தியில், சிரியாவில் ஐ.எஸ். ஆதிக்கம் உள்ள பகுதியான ரக்காவில் அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 42 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

பலியானவர்களில் 19 பேர் சிறுவர்கள், 12 பேர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் ஐ.எஸ். கட்டுப்பாட்டு பகுதிகளில் அமெரிக்கப் படைகள் தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இதற்கு உலக நாடுகள் பல கண்டனங்கள் தெரிவித்த நிலையிலும், தொடர்ந்து அமெரிக்கா சிரியாவில் வான்வழித் தாக்குதலை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்