கண்டி ஶ்ரீ தலதா மாளிகையின் புனரமைப்புப் பணிகளுக்காக 45 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

கண்டி ஶ்ரீ தலதா மாளிகையின் புனரமைப்புப் பணிகளுக்காக 45 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

எழுத்தாளர் Bella Dalima

22 Aug, 2017 | 3:39 pm

மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகா நாயக்க தேரர்கள், தியவடன நிலமே ஆகியோரின் வேண்டுகோளுக்கமைய, கண்டி ஶ்ரீ தலதா மாளிகையின் புனரமைப்புப் பணிகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 45 மில்லியன் ரூபாவை இன்று வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி செயலக நிதியத்தில் இருந்து இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்டி மாவட்ட செயலாளரிடம் இன்று நிதி கையளிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப ஆலோசனைகளுக்கு அமைய, இந்த நிதியைப் பயன்படுத்தி தலதா மாளிகையின் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்