அம்பாறையில் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்

அம்பாறையில் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்

அம்பாறையில் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்

எழுத்தாளர் Bella Dalima

22 Aug, 2017 | 3:07 pm

அம்பாறை மத்திய முகாம் பொலிஸ் நிலைய உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் குறித்த உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் தொடர்புபட்டுள்ளார்.

இதனையடுத்து, மத்திய முகாம் 26 ஆவது கொலனி பிரதேசத்தில் கடமைகளுக்காக சென்றிருந்த போது உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்