அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மூவர் மூன்றாவது நாளாக உண்ணாவிரதம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மூவர் மூன்றாவது நாளாக உண்ணாவிரதம்

எழுத்தாளர் Bella Dalima

22 Aug, 2017 | 5:51 pm

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூன்று பேர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் (20) முதல் அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

தமக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை கொழும்பிற்கு மாற்ற வேண்டாம் என கோரி கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்