17 வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன இலங்கை பணிப்பெண் தொடர்பில் தகவல்

17 வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன இலங்கை பணிப்பெண் தொடர்பில் தகவல்

17 வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன இலங்கை பணிப்பெண் தொடர்பில் தகவல்

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2017 | 1:34 pm

குவைத்திற்கு சென்று 17 வருடங்களாக காணாமல் போன இலங்கை பணிப்பெண் தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளன.

மரதன்கடவெல பகுதியைச் சேர்ந்த எச்.எம் சந்திரலதா என்பவர் தொடர்பிலே தகவல்கள் வௌியாகியுள்ளன.

கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தினூடாக அவர் குவைத்திற்கு சென்றுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்தே தனது மனைவி குவைத் நாட்டற்கு பணிக்கு சென்றிருந்ததாக அவரின் கவன் நியூஸ்பெஸ்ட்டுக்கு குறிப்பிட்டுள்ளார்.

தனது மனைவி காணாமல் போயுள்ளமை தொடர்பில் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனினும் இதுவரை குறித்த முறைப்பாடு தொடர்பில் எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவரின் முறைப்பாடு தொடர்பில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு நலன்புரி பிரதி அமைச்சர் மனுஷ் நாணயக்காரவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது,

இது தொடர்பில் தாம் ஆராய்ந்து பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected].lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்