புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இலங்கையர்களுக்கு மேலதிக கோட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன

புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இலங்கையர்களுக்கு மேலதிக கோட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன

எழுத்தாளர் Bella Dalima

21 Aug, 2017 | 6:48 pm

இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இலங்கையர்களுக்கு மேலதிகமாக 600 கோட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே 2,800 கோட்டாக்கள் கிடைத்துள்ளதுடன், தற்போது மொத்தமாக 3,400 பேருக்கு ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இலங்கை அரசாங்கம் சவுதி அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அனுமதி கிடைத்துள்ளது.

இதன்படி, நாளை (22) முதல் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் பதிவு செய்து புதிய கோட்டாக்களை பெற்றுக்கொள்ள முடியும் என முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் ஊடாகவே கோட்டாக்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பதிவு செய்யும் முன்னுரிமை அடிப்படையில் கோட்டாக்கள் வழங்கப்படும் எனவும் அமைச்சு குறிப்பிட்டது.

இதேவேளை, ஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டுக்கான துல்ஹஜ் மாத தலைபிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்