பிஹாரில் ஏற்பட்ட வௌ்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பிஹாரில் ஏற்பட்ட வௌ்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பிஹாரில் ஏற்பட்ட வௌ்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2017 | 8:58 am

பிஹாரில் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 253 ஆக அதிகரித்துள்ளது.

18 மாவட்டங்களைச் சேர்ந்த 1.26 கோடி மக்கள் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 4 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் 1,358 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய அனர்த்த முகாமைத்துவ படை மற்றும் இராணுவத்தினரை மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக அனுப்பி வைத்தமைக்காக பிஹார் மாநில முதல்வர் நித்திஷ் குமார் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்க்கையை மீள கட்டியெழுப்ப மத்திய அரசு உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க நிதியில் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையெனவும் நித்திஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உத்தர பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கி 69 பேர் உயிரிழந்துள்ளனர்.

அசாமிலும் கடந்த 3 மாதங்களாக நிலவிய சீரற்ற வானிலையால் 15 மாவட்டங்களின் 19 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்