பிரபல ஹொலிவுட் நகைச்சுவை நடிகர் ஜெர்ரி லூவிஸ் காலமானார்

பிரபல ஹொலிவுட் நகைச்சுவை நடிகர் ஜெர்ரி லூவிஸ் காலமானார்

பிரபல ஹொலிவுட் நகைச்சுவை நடிகர் ஜெர்ரி லூவிஸ் காலமானார்

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2017 | 9:57 am

ஹொலிவுட் திரையுலகில் அசைக்கமுடியாத நகைச்சுவை நடிகராக வலம் வந்த ஜெர்ரி லூவிஸ் தனது 91 ஆவது வயதில் லாஸ் வேகாஸில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் 1926 ஆம் ஆண்டு பிறந்த ஜெர்ரி லூவிஸ் ஹொலிவுட் உலகில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

நடிகராக மட்டுமல்லாது கதாசிரியராகவும் விளங்கிய ஜெர்ரி லூவிஸ், சக நடிகர் டீன் மார்டினுடன் இணைந்து காமெடி தொடர்களை நடத்தியுள்ளார்.

ஜெர்ரி லூவிஸ் நடத்திய காமெடி தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றவையாகும், த நாட்டி புரபெஸ்ஸர், த பெல் பாய் உள்ளிட்ட பல திரைப்படங்கள் ஜெர்ரி லூவிஸ் நகைச்சுவையால் பெரும் வெற்றிகளை பெற்றது.

ஜெர்ரி லூவிஸ் மரணதிற்கு பல்வேறு ஹொலிவுட் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்