தொற்றா நோய்கள் காரணமாக நாட்டில் 65 வீதமானோர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சு

தொற்றா நோய்கள் காரணமாக நாட்டில் 65 வீதமானோர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சு

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2017 | 7:04 am

தொற்றா நோய் காரணமாக நாட்டில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 65 வீதமாக காணப்படுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நீரிழிவு , இருதய நோய் , சுவாச நோய் மற்றும் உயர் குருதி அமுக்கம் போன்ற நோய்கள் காரணமாக உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் விசேட வைத்திய நிபுனர் டாக்டர் ஷாந்தி குணவர்தன தெரிவித்தார்.

மோசமான சுகாதார பழக்கம் மற்றும் தவறான உணவு முறையே இதற்கான காணரமாகும்.

இதற்கு முன்னர் தொற்று நோய் காரணமாகவே 65 வீதமானவர்கள் உயிரிழந்துள்ளதாக விசேட வைத்திய நிபுனர் டாக்டர் ஷாந்தி குணவர்தன தெரிவித்தார்.

உடல் பருமன் அதிகரிப்பதும் அதிக நோய்களுக்கு காரணம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்