தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை: ஆஷ்லி டி சில்வா 

தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை: ஆஷ்லி டி சில்வா 

எழுத்தாளர் Bella Dalima

21 Aug, 2017 | 8:54 pm

இந்தியாவுடனான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது.

இதனையடுத்து, தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் இலங்கை அணி ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எவ்வாறாயினும், அவ்வாறானதொரு குழப்ப நிலை தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் நடைபெறவில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்ததாவது,

[quote]மைதானத்தில் 15,000 பேர் வரை ரசிகர்கள் இருந்தனர். இலங்கை அணி வீரர்கள் பயணிக்கும் பஸ்ஸுக்கும் இந்திய அணி வீரர்கள் பயணிக்கும் பஸ்ஸுக்கும் இடையில் ரசிகர்கள் ஊடுருவ முயற்சிப்பர். இதுபோன்ற சம்பவங்கள் தினமும் நடைபெறுகின்றன. நேற்று இவ்வாறு நடைபெற்றதன் பின்னர் பொலிஸார் அந்த நபர்களிடம் பஸ்ஸை நோக்கிச்செல்ல முயற்சிக்க வேண்டாம் என கூறினர். என்றாலும், அவர்கள் தொடர்ச்சியாக பிரச்சினையில் ஈடுபட்டனர். இந்திய அணி வீரர்கள் மைதானத்தை விட்டு புறப்படும் போது அவர்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை. அதன்பின்னர், இலங்கை அணி வீரர்கள் பஸ்ஸில் ஏறி பயணிக்கும் போதும் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை. அந்த சந்தர்ப்பத்தில் இலங்கை அணி ரசிகர்கள் கூச்சலிடவில்லை.[/quote]

என தெரிவித்தார்.

மேலும், இந்தப்போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கலாம் என குறிப்பிட்ட அவர், இரு அணி வீரர்களும் தங்கியிருந்த விடுதிக்கு சென்று ரசிகர்கள் எவ்வித பிரச்சினைகளிலும் ஈடுபடவில்லை என சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்